Connect with us

பயங்கரமான வேலை பார்த்த விக்னேஷ் சிவன்.. இவங்களா அப்பாவி.. தனுஷை மிரட்டிய ஜோடிகள்.. உண்மையை சொன்ன பத்திரிக்கையாளர்.!

nayanthara dhanush

Tamil Cinema News

பயங்கரமான வேலை பார்த்த விக்னேஷ் சிவன்.. இவங்களா அப்பாவி.. தனுஷை மிரட்டிய ஜோடிகள்.. உண்மையை சொன்ன பத்திரிக்கையாளர்.!

Social Media Bar

Currently, the most talked about issues are the problems between Nayanthara and Dhanush. A few years ago actress Nayanthara got married to director Vignesh Sivan.

தற்சமயம் நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது.

அந்த திருமணம் நடைபெற்ற பொழுது திருமண வீடியோவை வெளியிடுவதற்கு netflix நிறுவனத்திடம் விலை பேசி இருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் இந்த வீடியோ தற்சமயம் தயாராகி வருகிறது. அதில் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே நயன்தாரா அந்த காட்சிகளை நெட்ப்ளிக்ஸ் டாக்குமெண்டரியில் வைப்பதற்கு தனுஷிடம் பேசி வருகிறார். ஆனால் தனுஷ் அவருக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தனுஷின் அனுமதியில்லாமலேயே அவர் காட்சிகளை வைத்துள்ளதால் தற்சமயம் தனுஷ் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

நயன்தாரா தனுஷ் பிரச்சனை:

இதனை தொடர்ந்து தனுஷை மிக மோசமாக விமர்சித்து நயன்தாரா ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களை பொருத்தவரை நயன்தாராவிற்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர். அதே சமயம் தனுஷிற்கு ஆதரவாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

dhanush nayanthara 2

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் இருந்தே தனுஷை ஏமாற்றி அவரிடமிருந்து நானும் ரவுடிதான் திரைப்பட பாடலை வாங்குவதற்கான முயற்சியை விக்னேஷ் சிவன் செய்ததாக கூறுகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.

விக்னேஷ் சிவன் செய்த வேலை:

இயக்குனர் விக்னேஷ் சிவனின் நண்பர்தான் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மூலமாக தனுஷ்க்கு தெரியாமலேயே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பெறுவதற்கான முயற்சிகளை செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இந்த விஷயம் தனுஷ்க்கு தெரியவே அந்த பாடலை கொடுக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தொடர்ந்து தனுஷிற்கு தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் இருவரும் தனுசை மிரட்டியாக கூறப்படுகிறது தனுஷ் அந்த பாடலை கொடுக்கவில்லை என்றால் அவரைக் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பதில் அளித்த தனுஷ் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளுங்கள் என்று தைரியமாக கூறிவிட்டாராம். இவ்வாறு இந்த நிகழ்வு குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி தற்சமயம் இது தான் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

To Top