Connect with us

தயவு செஞ்சு என்னை அப்படி கூப்பிடாதீங்க!.. வச்சு செய்வாங்க!.. நயன் தாராவை பயமுறுத்திய ரசிகர்கள்!..

nayanthara

News

தயவு செஞ்சு என்னை அப்படி கூப்பிடாதீங்க!.. வச்சு செய்வாங்க!.. நயன் தாராவை பயமுறுத்திய ரசிகர்கள்!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை நயன்தாராதான். தமிழில் சந்திரமுகி திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா இதுவரை 70-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் தெலுங்கு மலையாள திரைப்படங்களும் அடங்கும்.

முதலில் மலையாளத்தில்தான் நயன்தாரா நடித்து வந்தார். ஆனால் சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தமிழில் முக்கியமான நடிகராக மாறினார். அதே போல தமிழ் சினிமா நடிகைகளிலேயே தனக்கென தனி விமானம் வைத்திருக்கும் நடிகையும் நயன்தாராதான்.

பொதுவாக நயன்தாராவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வருகின்றனர் ஆனால் அந்த பெயர் குறித்து நிறைய சர்ச்சை இருந்து வருகிறது. விஜய் அஜித் மாதிரி ரஜினிக்கு முன் வந்த நடிகர்களே ரஜினிகாந்தின் பட்டத்திற்கு தகுதியானவர்களாக ஏற்றுகொள்ளாதப்போது ரஜினிகாந்திற்கு சமமான ஒரு நடிகையாக அவர் இருக்கிறாரா என்பது ஒரு கேள்விக்குறியான விஷயமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் தற்சமயம் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தொகுப்பாளர் அழைத்தார். உடனே நயன்தாரா என்னை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்காதீர்கள்.

அந்த பெயரில் என்னை அழைத்தாலே என்னை அதிகமாக திட்டுகிறார்கள் என்று கூறியிருக்கின்றார் நயன்தாரா. ஏன் உங்களை இப்படி திட்டுகிறார்கள் என கேட்கும் போது இல்லை எனக்கு தெரியவில்லை இன்னும் இந்த பட்டத்திற்கு நான் தகுதி அடையவில்லையா அல்லது நான் ஒரு பெண் என்பதால் என்னை திட்டுகிறார்களா என்று தெரியவில்லை ஆனால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று போட்டாலே சமூக வலைதளங்களில் 10 பேர் அதை பாராட்டினால் 50 பேர் என்னை திட்டுகிறார்கள் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா.

To Top