Tamil Cinema News
ஒரு நொடிக்கு இத்தனை லட்சம்.. நயன்தாரா வாங்கிய சம்பளம்..!
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். 10 கோடிக்கும் அதிகமாக இவரது சம்பளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவிலேயே பிரைவேட் ஜெட் வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை நயன்தாராதான் என்று கூறலாம். தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட் வீழ்ச்சி அடையாமல் இருக்கும் காரணத்தினால் அவரது சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருகிறது ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இப்பொழுது பாலிவுட் சினிமாவில் இவருக்கு வரவேற்புகள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாரா சமீபத்தில் டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொடுத்து இருக்கிறார். அந்த விளம்பரத்தில் 50 நொடிகள் நடித்துக் கொடுப்பதற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் நயன்தாரா.
கணக்குப்படி பார்த்தால் ஒரு நொடிக்கு 10 லட்சம் என்று அவர் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று இப்பொழுது பேசி வருகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.
