Connect with us

8000 பேரை கொன்ற தொழிற்சாலையின் கதை!.. போபால் நிகழ்வை அப்படியே எடுத்த ரயில்வே மேன் சீரிஸ் – ஒரு பார்வை!..

Hollywood Cinema news

8000 பேரை கொன்ற தொழிற்சாலையின் கதை!.. போபால் நிகழ்வை அப்படியே எடுத்த ரயில்வே மேன் சீரிஸ் – ஒரு பார்வை!..

Social Media Bar

உலக அளவில் நடந்த தொழில்துறை பேரழிவில் மிகப்பெரும் பேரழிவாக பார்க்கப்படுவது 1984 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடந்த விஷவாயு தாக்குதல் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5,74,366 பேர் இதில் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 8,000க்கும் அதிகமான நபர்கள் வெறும் இரண்டே வாரங்களில் இறந்து போனார்கள்.

யூனியன் கார்பைட் என்னும் தொழிற்சாலையில் இருந்து பரவிய விஷவாயுவே இதற்கு காரணமாக இருந்தது. இன்னமும் அந்த நிறுவனம் Eveready என்கிற பெயரில் இந்தியாவில் இயங்கிதான் வருகிறது. இருந்தாலும் இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம் என்பதால் அவர்களுக்கு பெரிதாக எந்த தண்டனையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் தொடர்தான் ரயில்வே மேன். இந்த பாதிப்பு நடந்த நேரத்தில் கோரக்பூர் எக்ஸ்ப்ரஸ் என்னும் இரயில் போபாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த இரயில் போபாலை வந்தடைந்தால் அதில் உள்ள ஆயிரக்கணக்கான நபர்களும் இறக்க வேண்டி இருக்கும்.

எனவே அங்கிருந்த ரயில்வே அதிகாரி தனது உயிரை கொடுத்து அந்த கோரக்பூர் எக்ஸ்ப்ரஸை வர விடாமல் தடுத்தார். அதனை அடிப்படையாக எடுத்துக்கொண்டு இந்த சீரிஸிற்கு ரயில்வே மேன் என பெயர் வைத்துள்ளனர்.

சீரிஸில் அரசியல் ரீதியாக பேசும்போது தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய மற்றும மாநில அரசு கவனம் செலுத்தாததுதான் இந்த நிகழ்விற்கு முக்கிய காரணம் என காட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை நடந்தப்போது மத்திய பிரதேசத்தில் மாநில அரசில் காங்கிரஸ்தான ஆட்சியில் இருந்தது. மத்தியிலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே இது காங்கிரஸிற்கு ஒரு நேரடி தாக்குதல்தான் என கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top