Connect with us

ஆஃபிசர் ஆன் ட்யூட்டி திரைப்படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்.!

Movie Reviews

ஆஃபிசர் ஆன் ட்யூட்டி திரைப்படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்.!

Social Media Bar

இன்று வெளியான திரைப்படங்களில் மலையாளத்தில் வெளியான ஆஃபிசர் ஆன் ட்யூட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் குஞ்சாகோ போபன் மற்றும் ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை:

குஞ்சாகோ போபன் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவர் காவல் நிலையத்திற்கு வந்த முதல் நாளே ஒரு நகை திருட்டு வழக்கு அவருக்கு வருகிறது. அதை விசாரிக்கும்போது ஜெகதீஸ் என்பவரின் மகள் தனது தந்தைக்கு தெரியாமல் நகையை திருடி விற்றுள்ளார் என்பது தெரிகிறது.

அதனை தொடர்ந்து நகை கடைக்கு சென்று இதுக்குறித்து விசாரிக்கிறார் கதாநாயகன். அப்போதுதான் இந்த நகையுடன் இன்னும் சில நகைகள் விற்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் காரணமாக ஜெகதீஸ் மகளின் காதல் விவகாரம் வெளியே தெரிய வருகிறது.

இதனால் அந்த பெண் தற்கொலை செய்துக்கொள்கிறாள். இதே மாதிரிதான் கதாநாயகனின் மகளும் இறந்தார் என்பதால் தடுமாறி போகிறார் ஹீரோ. அதன் பிறகுதான் இது தற்கொலை அல்ல இதற்கு பின்னே ஏதோ மர்மம் இருக்கிறது என அவர் அறிகிறார்.

மேலும் தன் மகள் தற்கொலைக்கும் இந்த தற்கொலைக்குமே தொடர்பு உள்ளதை அவர் அறிகிறார். பிறகு உளவு பார்த்து எப்படி அவர் அதை கண்டறிய போகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

To Top