Connect with us

டிசம்பர் 15 இல் மட்டும் 8 படங்கள் ரிலீஸ்!.. பெரும் காம்பிடேஷனா இருக்கும் போல…

alambana fight club

News

டிசம்பர் 15 இல் மட்டும் 8 படங்கள் ரிலீஸ்!.. பெரும் காம்பிடேஷனா இருக்கும் போல…

Social Media Bar

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஷால் சின்ன படங்கள் எடுப்பதாக இருந்தால் சினிமாவிற்கு வர வேண்டாம் ஏனெனில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஏகப்பட்ட திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

ஆனால் சின்ன படங்கள் என்பவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி சின்ன பட்ஜெட்டில் தயாரான எட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. அதனால் டிசம்பர் 15 மிக முக்கியமான ஒரு நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

அந்த வகையில் ஏற்கனவே உறியடி திரைப்படத்தின் மூலமாக பிரபலமாக இருந்த விஜயகுமார் நடிக்கும் பைட் கிளப் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனை லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார். அது மட்டுமன்றி அசோக் செல்வன் நடிப்பில் சபாநாயகன் என்கிற திரைப்படமும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இது அல்லாமல் நடிகர் வைபவ் மற்றும் முனீஸ் காந்தின் நடிப்பில் ஆலம்பனா என்னும் மாயாஜால திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது இல்லாமல் இன்னும் சின்ன பட்ஜெட்டில் தீதும் சூதும், அகோரி, பாட்டி சொல்லை தட்டாதே, ஸ்ரீ சபரி அய்யப்பன் ஆகிய படங்களும் வெளியாக இருக்கின்றன.

 இத்தனை திரைப்படங்களும் வருகிற டிசம்பர் 15 அன்று வெளியாக இருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் இந்த படங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தினால் இந்த திரைப்படங்களை பகிர்ந்து திரையரங்குகள் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பெரும் நாயகர்களின் படங்களை விட சின்ன படங்களுக்கு தான் திரையரங்குகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் திரையரங்குகளும் சின்ன திரைப்படங்கள் அதிகமாக ஓட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

To Top