சன் பிக்சர்ஸை பார்த்து அரண்டு போன திரையுலகம்! – விளக்கம் கொடுத்த அமீர்!
திரைப்படத்துறை என்றாலே அதில் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழ் திரை உலகிலும் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் பெரிய நிறுவனங்களே மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகின்றன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ், லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்றவை தமிழில் உள்ள பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கிய காலகட்டத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் கூறும் போது “ மற்ற தயாரிப்பு நிறுவனங்களைப் போலத்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படங்களை வாங்குகின்றன. ஆனால் சின்ன திரையில் ஏற்கனவே பெரும் வணிகத்தை கொண்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெள்ளி திரைக்கு வரும் பொழுது அது வெள்ளித்திரையில் இருக்கும் சின்ன தயாரிப்பு நிறுவனங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது.”
முக்கியமாக சன் பிக்சர்ஸ் ஒரு புதிய வழிமுறையை கையாண்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிகமான விளம்பரத்தை தனது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 20 விளம்பரங்களையாவது அப்போதைய காலக்கட்டத்தில் சன் டிவியில் காண முடியும்”.
இதனால்தான் சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் சன் பிக்சர்ஸை பார்த்து பயந்தன. என இயக்குனர் அமீர் விளக்கம் அளிக்கிறார்.