வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பதை விட உள்ளூரிலேயே பெரிதாக சம்பாதித்து முன்னேற முடியும் என்பதை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வெற்றி கொடி கட்டு.
இயக்குனர் சேரனால் இயக்கப்பட்ட வெற்றி கொடிக்கட்டு திரைப்படம் அப்போது வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். இப்போது வரை கிராமத்து இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றால்தான் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம் உண்டு.
ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் வசனத்திற்கு ஏற்ப இங்கேயே பிழைக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் சேரன் எழுதிய கதைதான் வெற்றி கொடிக்கட்டு.

வெற்றி கொடிக்கட்டு படம் திரைப்படம் ஆக்கப்படும் போது அதில் மொத்தம் ஏழு பேர் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். அதில் சிம்பு தேவனும் இயக்குனர் பாண்டியராஜும் இருந்தனர். ஆனால் படத்திலிருந்து இரண்டு உதவி இயக்குனர்களை நீக்க வேண்டி இருந்ததால் அப்பொழுது சேரன் பாண்டியராஜையும் சிம்பு தேவனையும் நீக்கிவிட்டார்.
ஆனால் இவர்கள் இருவரும் அதற்கு முன்பே தங்களது குடும்பத்தாரிடம் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டதாக கூறி பெருமைப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மனமுடைந்த பாண்டியராஜ் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றிருந்தார்.
இந்த நேரத்தில் இருந்த ஐந்து உதவி இயக்குனர்களில் ஒருவர் அவராகவே படத்தில் இருந்து நீங்கி விட்டதால் அதற்கு பதிலாக சிம்பு தேவனை சேர்த்துக் கொண்டனர். இறுதியாக பட வாய்ப்பு கிடைக்காமல் தனியாக நின்றார் பாண்டியராஜ். இது குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது படத்தில் பெயர் போடும்போது அதில் உதவி இயக்குனர்கள் பெயரில் எனது பெயர் இல்லாததை பார்க்கும்பொழுது முகுந்த வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார் பாண்டிராஜ்.