News
தமன்னாவின் ஆட்டத்துக்கு பிறகுதான் ரஜினி நடிப்பே!.. மறைமுகமாக பேசிய பார்த்திபன்!..
பார்த்திபன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் பலவற்றை இயக்கி வருகிறார். பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் விசித்திர கதை அமைப்புகள்தான் பார்த்திபன் திரைப்படங்களிலும் இருக்கும்.
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அவனுக்கு மட்டும் என்ன ஏழு அறிவா இருக்கிறது. நமக்கு இருக்கும் அதே அறிவு தானே அவர்களுக்கும் இருக்கிறது. அவனைப் போல நாம் படம் எடுத்தால் என்ன என்று எனக்கு பலமுறை தோன்றியது என்று பார்த்திபனே வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
பார்த்திபனுக்கு பின்னடைவு:
தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கினாலும் கூட பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு என்பது இப்போது வரை கிடைக்கவே இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல பேட்டிகளில் இது குறித்து பேசி இருக்கிறார் பார்த்திபன்.

சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. அந்த திரைப்படத்தை தற்சமயம் வெளியான இந்தியன் 2 திரைப்படத்துடன் போட்டி போட்டு கொண்டு வெளியிட்டு இருக்கிறார்.
பார்த்திபன் அறிவியல் புனைவு கதையாக இருக்கும் டீன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் இந்த திரைப்படத்திற்காக நிறைய சலுகைகளையும் வழங்கியிருந்தார் பார்த்திபன்.
வெளியான டீன்ஸ் திரைப்படம்:
அதில் அவர் கூறும் பொழுது 100 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தி திரைப்படத்தை பார்க்கலாம் என்று கூறியிருந்தார் பார்த்திபன். அப்படியும் கூட படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்தியன் 2 திரைப்படம் அதிகமான திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்தது.

அதனால் டீன்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்பு திரையரங்குகள் என்பதே முதலில் அதிகமாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் பெரிய நடிகர்கள் படங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை தாக்கி பேசியிருந்தார் என கூறப்படுகிறது.
அதில் அவர் பேசும்பொழுது ஒரு படம் நல்லா ஓடுவதற்கு மிகப்பெரிய காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்து விடுகிறது அதற்குப் பிறகுதான் அந்த படத்தில் இருக்கும் கதையே காரணமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இது அதிக வைரலாக துவங்கியிருக்கிறது ஆனால் பார்த்திபன் ரஜினியின் படத்தை மட்டும் கூறவில்லை சுந்தர்சியின் அரண்மனை 4 திரைப்படத்தையும் சேர்த்துதான் கூறுகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
