Actress
தெரிய வேண்டியதெல்லாம் கச்சிதமா தெரியுதே… இளசுகள் ஹார்ட் பீட்டை ஏத்திய பார்வதி நாயர்!.
Parvati Nair: வெள்ளித்திரையில் சில படங்களை மட்டும் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகள் குறிப்பிட்ட சிலரே.
அவர்கள் நடித்த திரைப்படங்கள் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் அவர்கள் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் புதிதாக பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்.
இதனால் அவரின் ரசிகர்கள் பின்தொடர்ந்து அவர்களின் புகைப்படங்களை வைரலாகி வருவது மட்டுமல்லாமல் கமெண்ட் செய்து வருவார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் இருப்பவர் தான் பார்வதி நாயர்.
பார்வதி நாயர்
பார்வதி நாயரின் உண்மையான பெயர் பார்வதி வேணுகோபால் நாயர். இவர் ஒரு மாடல். தன்னுடைய 15-ஆவது வயதிலிருந்து மாடலிங் செய்ய தொடங்கிய பார்வதி நாயர் அபுதாபியில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.
இவர் முதன் முதலில் பாப்பின்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் கன்னட அறிமுக நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.

அதேசமயம் தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரையை பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் பார்வதி நாயர்
ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற பார்வதி நாயர், தற்பொழுது சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது அவர் இணையத்தில் பதிவேற்றி உள்ள வீடியோ அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அதில் அவர் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்.
