News
வடக்குல என்ன வாழுதுன்னு தமிழ்நாட்டை குறை சொல்றீங்க!.. குஷ்புவின் பதிவிற்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!..
Actress Khushbu : வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து இங்கு பிரபலமான நடிகைகளில் நடிகை குஷ்பூ முக்கியமானவர். எப்படி ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக துவங்கிய பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தாரோ, அதேபோல குஷ்புவும் இளைஞர்களின் விருப்பமான ஒரு நடிகையாக இருந்தார்.
அதுவும் அவர் சின்னத்தம்பி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு அவருக்கான ரசிக்கப்பட்டாளம் என்பது அதிகரித்தது. அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார் குஷ்பூ.

கிட்டத்தட்ட பல வருடங்கள் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்தார். அதற்கு பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்த குஷ்பூ அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார்.
சுந்தர் சி இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களை குஷ்பூ தயாரித்து வந்தார். இந்நிலையில் தற்சமயம் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் குஷ்பூ இருந்து வருகிறார்.
சர்ச்சையை கிளப்பிய குஷ்பு:
அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயங்களை பேசுவது குஷ்பூவின் வாடிக்கையாகிவிட்டது. அப்படியாக இந்த முறை பேசியிருக்கும் விஷயமும் மக்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. குஷ்பூ சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ”2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்.
வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க மத்திய போதைப்பொருள் தயாரிப்பு பிரிவு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து எந்த ஒரு விஷயமும் செய்யாமல் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்.

தமிழ்நாடு போதை பொருளுக்கான இடமாக மாறி வருகிறது என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தால் குஷ்பூ. இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள போதை பொருள் பறிமுதல் தகவல்களை காட்டுகின்றனர்.
அதில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் தான் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில் முதல் இடத்தில் இருக்கின்றன. அப்படியாக போதை பொருள் அங்கு தான் அதிகமாக கடத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும் பொழுது தமிழ்நாட்டை குஷ்பு எப்படி குறை சொல்லலாம் என்று பலரும் இதற்கு எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
