Different News
இந்த ஒரு பொருள் இருந்தா போதும்.. சாதா சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளா மாத்திடலாம்… அரட்டிவிட்ட புது தொழில்நுட்பம்.!
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மோட்டார் வாகனங்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் பைக் வைத்திருப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.
ஆனால் இப்பொழுது வீட்டுக்கு இரண்டு மூன்று பைக்குகள் இருக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. இருந்தாலும் கூட இப்பொழுதும் லட்ச ரூபாய்க்கு பைக் வாங்க முடியாதவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
மேலும் சைக்கிள் விரும்பிகள் என்கிற ஒரு குழுவும் இருந்து வருகின்றனர் தொடர்ந்து சைக்கிள் ஓர் ஆரோக்கியமான வாகனமாக இருப்பதால் அதை ஓட்டுவதன் மூலம் அதை ஒரு உடற்பயிற்சியாகவும் பழகிக் கொண்டவர்கள் தொடர்ந்து இப்பொழுதும் சைக்கிள் ஓட்டி வருகின்றனர்.
ஆனாலும் கூட சைக்கிளை கொண்டு அதிக தூரம் ஓட்டி செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் எலக்ட்ரிக் சைக்கிள் என்கிற முறை வந்தது.
கருவியின் திறன்கள்
எலெக்ட்ரிக் சைக்கிளில் சார்ஜ் செய்து கொள்வதன் மூலம் 60 முதல் 70 கிலோமீட்டர் வரை சைக்கிளிலேயே பயணிக்க முடியும் என்கிற நிலை வந்தது. இருந்தாலும் கூட அதன் விலை அதிகமாக இருப்பதால் சாதாரண சைக்கிள் வைத்து இருப்பவர்களுக்கு அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனை சரி செய்யும் வகையில்தான் தற்சமயம் pikaboost 2 என்கிற புது கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. pikaboost 2 எனப்படும் இந்த கருவியை சைக்கிளின் பின் சக்கரத்தில் மாட்டி விட்டால் போதும். சைக்கிள் எலக்ட்ரிக் சைக்கிளாக மாறிவிடும்.
இது மிக எளிதாகவே மாட்டக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஒரு சாதனத்திலேயே பேட்டரி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பேட்டரியை நாம் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதேபோல அந்த பேட்டரியை பயன்படுத்தி மொபைல் போனுக்கும் நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
அதை ஒரு பவர் பேங்க் ஆகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அனைத்து சைக்கிள்களின் சக்கரங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த pikaboost 2 வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
அதிகபட்சமாக 96 கிலோ மீட்டர் வரை இதன் மூலமாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் அதனுடைய விலையும் தற்சமயம் அதிகமாக இருக்கிறது. ஆனால் எப்படியும் நாட்கள் செல்ல செல்ல இதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விலையில் எப்படியும் 8000 ரூபாய்க்கு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இதில் பின்பக்க லைட் மற்றும் இன்டிகேட்டர் லைட் வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
