Cinema History
தேவையில்லாமல் போட்ட ஒரு கையெழுத்து.. அண்ணனை கூட விடல!. குத்தி காட்டி கண்ணதாசன் போட்ட பாடல்!.
சினிமாவில் பெரும்பாலும் சிறப்பான பாடல் வரிகளை எழுதும் கவிஞர்களுக்கு எல்லாம் மானசீக குருவாக கவிஞர் கண்ணதாசன்தான் இருப்பார். அந்த அளவிற்கு கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக இருந்தவர்.
பொதுவாக கவிஞர்களுக்கு ஒரு பாடலுக்கான வரிகளை எழுதுவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும். ஆனால் கண்ணதாசனை பொறுத்தவரை அவருக்கு அருவி மாதிரி பாடல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும். இது இல்லாமல் கண்ணதாசனிடம் ஒரு சிறப்பம்சமும் உண்டு.
அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் இருந்தார் என்றால் அவருக்கு சிறப்பாக மகிழ்ச்சியான பாடல்களை எழுதுவதற்கு வரும். அதுவே மிகவும் சோகமாக இருந்தார் என்றால் சோகமான பாடல்களை எழுதுவார் கண்ணதாசன்.

இந்த நிலையில் வேறு ஒரு நபருக்காக ஜாமின் கையெழுத்து போட்டு அதன் மூலம் பெரும் கடன் சுமையில் சிக்கினார் கண்ணதாசன். அந்த சமயத்தில் அவர் மிகவும் கவலையில் இருந்தார். அதே நேரம் ஒரு சோக பாடலுக்கு பாடல் வரிகள் எழுத அவருக்கு வாய்ப்பு வந்தது.
இந்த நிலையில் அந்த பாடலுக்கு சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என பாடல் வரிகளை எழுதியிருந்தார் கண்ணதாசன். அதே போல ஒருமுறை மாபெரும் கடன் பிரச்சனையில் இருந்தப்போது தனது அண்ணனிடம் கடன் கேட்டார் கண்ணதாசன்.
ஆனால அவரது அண்ணன் அந்த சமயத்தில் இவருக்கு உதவவில்லை. இதனால் விரக்தியடைந்த கண்ணதாசன் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்னும் பாடல் வரிகளை எழுதினார். இப்படி அவரது வாழ்வில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பாடல் வரிகள் வழியாக அவர் வெளிப்படுத்தி வந்தார்.
