News
ஆடுன ஆட்டத்துக்கு வந்து விழுந்தது வேட்டு!.. ஆதி குணசேகரனை கைது செய்த போலீஸ்!..
நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அவருக்கு பதிலாக யார் ஆதி குணசேகரனாக நடிக்கிறார் என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. இதனை அடுத்து அந்த கதாபாத்திரம் இல்லாமலே கதையை நகர்த்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் வேல ராம மூர்த்திதான் ஆதி குணசேகரனாக நடிக்கிறார் என்று உறுதியானது.
ஆனால் வேல ராம மூர்த்தி வந்ததும் ஏன் இந்த ஆள் வந்தார் என யோசிக்கும் அளவிற்கு ஆதி குணசேகரனின் கதாபாத்திரத்தையே மாற்றிவிட்டனர். இது நேயர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தனது தம்பிகளை போலீஸ் அடிப்பதை பார்த்த ஆதி குணசேகரன் அந்த போலீஸை அடிப்பதாக காட்சிகள் இருந்தது.
இப்படியான காட்சிகள் எல்லாம் இதற்கு முன்பு ஆதி குணசேகரனுக்கு இருக்கவில்லை. இந்த நிலையில் போலீஸ் என்ன சும்மாவா இருப்பார்கள் அவர்கள் பங்குக்கு இன்று ஆதி குணசேகரனை கைது செய்ய வந்துவிட்டார்கள். இதனையடுத்து ஆதி குணசேகரனை கைது செய்தது போலீஸ்.
முதலில் வேல ராம மூர்த்திக்கு கொஞ்சம் கெத்து காட்டுவதற்காக இப்படியெல்லாம் காட்சிகள் அமைந்தாலும் கதையின் நாயகர்கள் அந்த நான்கு பெண்கள்தான். எனவே கதை மீண்டும் அவர்களுக்கு ஏற்றார் போல மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
