Connect with us

அவள் உலக அழகியே..! – பூஜா ஹெக்தேவின் அசத்தும் புகைப்படங்கள்..

Actress

அவள் உலக அழகியே..! – பூஜா ஹெக்தேவின் அசத்தும் புகைப்படங்கள்..

Social Media Bar

பல நடிகைகள் வேறு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமடைந்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் பிரபலமாக முடியாமல் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்தே.

தமிழில் முதன் முதலாக முகமூடி திரைப்படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனையடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சித்தார் நடிகை பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவிற்கு சென்ற சில காலங்களிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து  தெலுங்கில் அனைத்து முக்கிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்தே.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலும் பூஜா ஹெக்தேவிற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துவிட்டார் பூஜா ஹெக்தே. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பூஜா ஹெக்தே புகைப்படங்கள் வெளியிடுவதுண்டு. தற்சமயம் அப்படியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

To Top