Actress
வெகு நாட்களுக்கு பிறகு பூஜா ஹெக்தே வெளியிட்ட புகைப்படங்கள்! – இப்போ இதுதான் ட்ரெண்ட்
முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையானவர் நடிகை பூஜா ஹெக்தே.

முதன் முதலில் தமிழில் முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்தேவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் முகமூடி திரைப்படமும் அந்தளவிற்கு வெற்றியை பெறவில்லை.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெற்ற பூஜா ஹெக்தே அடுத்ததாக பாலிவுட் சினிமாவிற்கும் சென்றார். நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

தற்சமயம் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் பூஜா ஹெக்தே வெகு நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் புதிய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

