பயங்கரமான வசூல் வேட்டையில் லவ் டுடே – ஐந்தே நாளில் இவ்வளவு வசூலா?

கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே.

Social Media Bar

காதலர்களும் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றி கொள்வதை அடுத்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு மிகவும் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட திரைப்படமாக லவ் டுடே உள்ளது.

இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயக்குனர் பிரதீப்பிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ளனர். தயாரிப்பு செலவை விடவும் அதிகமான தொகையை பெற்றுக்கொடுத்துள்ளது இந்த திரைப்படம்.

லவ் டுடே திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஒரு மாத முடிவில் இன்னும் அதிக வசூல் சாதனை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.