Tamil Cinema News
மணிகண்டனுக்கு இருந்த அந்த நல்ல மனசு பிரதீப் ரங்கநாதனுக்கு இல்லாம போச்சே..
தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக நடிகர் மணிகண்டன் இருந்து வருகிறார். மணிகண்டன் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பல துறைகளில் பணிப்புரிந்து வருகிறார். ஆனால் மிக தாமதமாகதான அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் அவர் சினிமாவிற்கு வந்தார். ஜெய் பீம் திரைப்படத்தில் எதார்த்தமாக கிடைத்த வாய்ப்பு மணிகண்டனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
ஜெய் பீம் திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிகண்டன். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன்.
இந்த நிலையில் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் டெல்லி கணேசோடு இவருக்கு இருந்த பழக்கம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் மணிகண்டன். அதில் மணிகண்டன் கூறும்போது நாங்கள் அந்த சமயத்தில் ஒரு குறும்படம் எடுத்தோம்.
அதில் நடிப்பதற்காக டெல்லி கணேசிடம் கேட்டோம். அவர் ஒரு சம்பளம் சொன்னார். அதை எங்களால் தர இயலவில்லை. அதை விட மிக குறைவான சம்பளத்தை நான் கூறினேன். அவரும் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நடித்து முடித்த பிறகு அந்த சம்பளத்தையும் அவர் வாங்கவில்லை என கூறினார் மணிகண்டன்.
இதே போல டெல்லி கணேஷ் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுக்கும் உதவியுள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இதை எங்கேயும் சொன்னது கிடையாது என்று மணிகண்டனை இதுக்குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
