Tamil Cinema News
நண்பனால் ஏற்பட்ட காதல் தோல்வி.. மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்.!
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக மாறியுள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வந்துள்ளன. இதனால் வெகு சீக்கிரத்திலேயே நல்ல கலெக்ஷன் கொடுக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இப்போது பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான லவ் டுடே திரைப்படமே காதல் கதையை அடிப்படையாக கொண்ட கதையாகதான் இருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனக்கு நடந்த பள்ளி கால காதலையும் அதனால் ஏற்பட்ட தோல்வியையும் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இதுக்குறித்து கூறும்போது பள்ளி காலங்களில் ஒரு பெண்ணை ஆழமாக காதலித்தேன். அந்த சமயங்களில் எங்கள் வீட்டில் லேன் லைன் போன் தான் இருந்தது. அதனால் நான் அந்த பெண்ணோடு லேன் லைனில் பேசி வந்தேன்.
பெரும்பாலும் நான் தான் அவளுக்கு போன் செய்வேன். அப்படியாக ஒரு நாள் போன் செய்தப்போது போன் பிஸியாக இருந்தது. நான் திரும்ப திரும்ப போன் செய்த பிறகு 1 மணி நேரம் கழித்து போனை எடுத்தாள். என் பக்கத்து வீட்டு பையனிடம் பாட்டு பாடி கொண்டிருந்தேன் என கூறினாள்.
உனக்கு பாட்டு எல்லாம் பாட தெரியுமாடி என அதிர்ச்சியாக கேட்டேன். பிறகு அவளிடம்தான் அதிகமாக பேசி வந்தாள். பிறகு ஒரு நாள் அவளிடம் பேசும்போது என்னை விட அவனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறாய் உனக்கு நான் முக்கியமா அவன் முக்கியமா என கேட்டேன்.
அதற்கு அவள் எனக்கு நண்பன், காதலன் இருவருமே முக்கியம் என கூறினாள். எப்போது நான் முக்கியம் என தோன்றுகிறதோ அப்போது என்னிடம் பேசு என போனை நான் வைத்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு மாசத்திற்கு அவள் போனே செய்யவில்லை.
சரி என்று நான் போன் செய்தேன் அவள் எடுக்கவில்லை. அதுதான் எனக்கு நானே வைத்துக்கொண்ட ஆப்பு என கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
