News
என்னான்னே தெரியாம வந்து பேச வேண்டியது.. பவண் கல்யாணை கலாய்த்து பிரகாஷ் ராஜ் செய்த சம்பவம்..!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கூட வாயை திறந்து வருகின்றனர். சிலருக்கு அது பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தாலும் கூட இது குறித்த பேச்சுக்கள் என்பது ஓய்வதாக இல்லை.
ஏனெனில் பொதுவாக சைவத்துக்கு பெயர் போன ஒரு கடவுளாக தான் பெருமாள் பார்க்கப்படுகிறார். அப்படி இருக்கும் பொழுது அவரது தேவஸ்தானத்திலேயே தொடர்ந்து அசைவம் கலந்த லட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தற்சமயம் தென்னிந்திய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் திருப்பதிக்கு சென்று வந்தால் சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கொள்கைகளை பின்பற்றி வந்த பக்தர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

pawan kalyan
பிரகாஷ் ராஜ் கேள்வி
இதற்கு இதற்கு நடிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பிரகாஷ்ராஜ் இதுக்குறித்து பேசும் பொழுது எதற்கு திருப்பதி லட்டு பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக மாற்றுகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த பவண் கல்யாண், பிரகாஷ்ராஜ் சார் உங்கள் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். இந்து மதத்தில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை பற்றி நாங்கள் பேசக்கூடாதா? என்று கேட்டிருந்தார் பவன் கல்யாண்.
இதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ் நான் இப்பொழுது படபிடிப்பில் இருக்கிறேன். 30-ம் தேதி வந்த பிறகு உங்களது கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ஆனால் நீங்கள் நான் சொன்ன விஷயத்தை முதலில் புரிந்து கொள்ளவில்லை எனவே அதற்குள் மீண்டும் ஒருமுறை எனது பதிவை படித்து விடுங்கள் என்று நக்கலாக பதில் அளித்து இருக்கிறார்.
