இனி லிவிங் ரிலேஷன்ஷிப் கிடையாது.. ப்ரியா பவானி சங்கர் எடுத்த திடீர் முடிவு!.
Priya Bhavani Shankar: தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து வருவார்கள்.
மேலும் ஒரு சிலர் தங்களின் வாழ்க்கையை தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் தொடங்கி, தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் படங்கள் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.
மேலும் இவர்கள் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பதாலும் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். தற்பொழுது இவரின் காதலருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கினார். அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் நியூஸ் வாசிப்பாளராகவும் வேலை பார்த்து இருக்கிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாண முதல் காதல் வரை” என்ற சீரியல் தொலைக்காட்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக தொலைக்காட்சி நடிகைக்கான விருது விஜய் டிவியில் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு இவர் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, அத்தியாயம் ஒன்று, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தலை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே பிரபலமானார்.
மேலும் கடைக்குட்டி சிங்கத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பல வெள்ளித்திரை படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களின் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பிரியா பவானி சங்கர்
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காதலரான ரத்தினவேல் என்பவருடன் அடிக்கடி இருக்கும் புகைப்படங்களை இணைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் கூறியபோது நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமே அவர்தான். எங்கள் திருமணத்திற்கு பிளான் செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால், திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.