Tamil Cinema News
லவ் பண்ணும்போது அந்த விஷயத்துக்கு செலவு செய்ய தேவையில்லை.. நடிகை ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை ப்ரியா பவானி சங்கர் இறந்து வருகிறார். சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கொடுத்து வந்தன.
பிரியா பவானி சங்கர் நடித்த யானை, ரத்னம், இந்தியன் 2 ஆகிய மூன்று திரைப்படங்களும் வரிசையாக தோல்வியை கொடுத்து வந்தன. இதனால் பிரியா பவானி சங்கர் ஒரு தோல்வி நடிகை என்று பேச்சுக்கள் வர துவங்கின்றன.
ஆனால் டிமான்டி காலனி 2 திரைப்படம் அவரை காப்பாற்றிவிட்டது. அந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்தான் முக்கிய கதாபாத்திரம். அந்த படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
வேற ஏதாவது மீண்டும் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் அவரது காதல் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்பொழுது என்னுடைய காதலை நான் மறைக்க நினைப்பதாக பலரும் நினைக்கின்றனர். உண்மையில் அப்படி இல்லை நான் எங்கேயும் எனது காதலை மறைத்ததே கிடையாது. எனது காதலர் யார் என்பது அனைவருக்குமே தெரியும்.
காதலிக்கும் பொழுது எனது காதலரும் வேலைக்கு செல்லவில்லை. நானும் வேலைக்கு செல்லவில்லை. எனவே எங்களுக்குள் ஒரு தீர்மானத்தை செய்து கொண்டோம். லவ் பண்ணும் போது பரிசு வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது.
அதற்கு பதிலாக இருவரும் சேர்ந்து ஓர் உணவகத்திற்கு சென்று சாப்பிடுவது நல்லது என்று தீர்மானம் செய்து கொண்டோம். அதை கல்லூரி முடிக்கும் வரை பின்பற்றினோம் என்று கூறி இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.