Tech News
செல்போனை 100 சதவீதம் சார்ஜ் போட்டால் இந்த பிரச்சனை வரும்.. இது தெரியாம போச்சே.!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்பாடு என்பது உலக அளவில் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவிற்கு மொபைல் போன் அதிகரித்த அதே சமயம் அதன் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது.
ஒரு நாளில் கிட்டத்தட்ட இரண்டில் இருந்து மூன்று மணி நேரங்களை சராசரியாக மொபைல் போனுக்காக செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
இதனால் அதிக பேட்டரி கொண்ட மொபைல் போன்கள் இப்பொழுது அதிகமாக வர துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோனை 100% சார்ஜ் போடுவதால் பிரச்சனைகள் ஏற்படும் என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.
அதாவது இது மொபைல் போனின் ஆயுட்காலத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதிகபட்சம் மொபைலை 80% வரை சார்ஜ் போட்டால் அதன் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் ஆனால் தொடர்ந்து எப்பொழுதும் 100% சார்ஜ் போடும் போது அதன் ஆயுள் காலம் குறையும் என்று கூறப்படுகிறது.
