சரத்குமார் பட இயக்குனரை வாழ வைக்க நான் செஞ்ச காரியம்!.. என் வாழ்க்கையில் விளையாடிடுச்சு!.. மனம் திறந்த தயாரிப்பாளர்!.
சினிமாவில் நாம் செய்கிற சின்ன சின்ன தவறுகள் கூட பெரிய பாதிப்புகளை உருவாக்கிவிடும். இப்போது இருப்பதை விடவும் முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது மிக கடினமாக விஷயமாகவே இருந்தது.
இதனால் படங்களில் சின்ன தவறுகள் செய்தால் கூட அதனால் அவர்கள் பட வாய்ப்புகளை இழந்து வந்தனர். இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். சௌந்தர பாண்டியனை பொறுத்தவரை அவரது உறவினர்கள் பலர் சினிமாவில் இருந்தனர்.
ஆனால் அவருக்கு கூடைப்பந்து மேல்தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரு கூடைப்பந்து போட்டியில் அவரது கை எலும்பு முறிந்துவிடவே இனி கூடைப்பந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த சௌந்தர ராஜனுக்கு ப்ரொடக்ஷன் மேனஜராக வேலை கிடைத்தது.

அங்கு தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வந்தார். இந்த நிலையில்தான் இயக்குனர் பவித்திரன் சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தார். அவர் இயக்குனராக ஆசைப்பட்டார். இந்த நிலையில் பவித்திரன் இயக்கிய முதல் படமான வசந்தக்கால பறவை படத்தின் கதையே நான் சொன்னதுதான் என்கிறார் சௌந்தர பாண்டியன்.
இந்த நிலையில் தனது தயாரிப்பாளரிடம் ஒரு மதிய வேளையில் பவித்திரனை அறிமுகப்படுத்தினார் சௌந்தர பாண்டியன். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அவரை வேலையில் இருந்தே தூக்கிவிட்டார். அதன் பிறகுதான் சௌந்தர பாண்டியன் தனி தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறினார்.
இதனை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Source – Link