Connect with us

உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! –  ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!

Cinema History

உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! –  ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!

Social Media Bar

ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி  ராதாரவி ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார்.

ரஜினியின் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் உடனே திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு அது குறித்து ரஜினியிடம் பேசுவார் ராதாரவி. இந்த நிலையில் ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் ராதா ரவி. அப்போது ரஜினியிடம் அவர் நடித்த ஒரு திரைப்படம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ராதாரவி “ஆனால் சமீபத்தில் வந்த ஒரு மனிதன் படம் எனக்கு பிடிக்கலை சார்”. என ராதா ரவி கூறியுள்ளார். ஏன் பிடிக்கல என ரஜினி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் ராதா ரவி. அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தனது மார்பகங்களில் வெடி குண்டுகளை கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சி அமைந்திருந்தது.

அதில் ரஜினி தாவி தாவி சண்டையிடுவார். ஆனால் அப்படி சண்டையிட்டால் வெடிகுண்டுகள் வெடித்துவிடும். படம் நடித்தாலும் ஒரு லாஜிக் வேண்டாமா? என ரஜினியிடம் கேட்டுள்ளார் ராதா ரவி. இதை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

To Top