Actress
அனிமேஷன் லுக்கிற்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங்! –கோச்சடையானை விட நல்லாதான் இருக்கு!
சில கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் இல்லாவிட்டாலும் சில காலங்களிலேயே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.

தமிழில் தடையர தாக்க, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அந்த படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ரகுல் ப்ரீத் சிங்கை மிகவும் அழகாக காட்டி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு பல இளைஞர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர்களானார்கள்.

ஆனால் அதற்கு பிறகு வந்த திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் எதிர்பார்த்த க்யூட்னஸ்க்கு பதிலாக விறைப்பான ஒரு கதாபாத்திரமாக தோன்ற துவங்கினார். தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் இவர் இப்படியாக தோன்ற இவருக்கு இருந்த ரசிகர்கள் தமிழ் வட்டாரத்தில் குறைந்தனர்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தற்சமயம் ஏ.ஐ முறையில் அனைவரும் தங்களை ஓவியங்களாக, கார்ட்டூனாக உருவாக்கும் ஒரு தொழில்நுட்பம் வந்துள்ளது.

பலரும் இதில் தங்கள் முகங்களை மாற்றி அமைத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

