Connect with us

ரஜினியா? கமலா? – இக்கட்டில் மாட்டிக்கொண்ட லோகேஷ்!

Rajini Kamal

News

ரஜினியா? கமலா? – இக்கட்டில் மாட்டிக்கொண்ட லோகேஷ்!

Social Media Bar

தமிழில் உள்ள வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியாகும் திரைப்படங்கள் யாவும் பயங்கரமான ஹிட் கொடுப்பதை அடுத்து அனைத்து ஹீரோக்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட துவங்கிவிட்டனர்.

Rajini Kamal

தற்சமயம் நடிகர் விஜய்யை கொண்டு லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் எந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

 அடுத்ததாக கார்த்தியை கதாநாயகனாக வைத்து  கைதி இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். அதற்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் வேலை வேறு இவருக்கு இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த்தும் தனக்கு ஒரு திரைப்படம் பண்ண வேண்டும் என லோகேஷ் கனகராஜூடம் கேட்டுள்ளார்.

தற்சமயம் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் பிறகுதான் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர போகிறார் ரஜினி. அது மட்டுமின்றி நடிகர் கார்த்தி ஏற்கனவே இதற்காக தேதியை ஒதுக்கி வைத்துவிட்டார். வருகிற ஜூன் அல்லது ஜூலையில் கைதி 2வின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

ஆனால் ரஜினிகாந்திற்கு படம் பண்ண வேண்டும் எனில் அது விக்ரம் திரைப்படத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் யோசனையில் உள்ளார் இயக்குனர் லோகேஷ். எனவே இதுக்குறித்து கமலிடம் பேசுவதாக கூறியுள்ளார் ரஜினிக்காந்த்.

To Top