அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை வித்தது தப்பா போச்சு!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட வசூல் நிலவரம்!..

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

இந்த திரைப்படம் என்கவுண்டர் என்னும் முறைக்கு எதிரான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் தா.செ ஞானவேல் ஏற்கனவே இயக்கிய ஜெய் பீம் திரைப்படத்திலேயே காவல்துறைக்கு எதிராக பல விஷயங்களை பேசியிருப்பார்.

இந்த நிலையில் எல்லா காலங்களிலும் ரஜினிக்கு பெரும் அடையாளமாக அமைந்த சில படங்கள் உண்டு. அந்த வகையான படங்களில் முக்கியமான படமாக பாட்ஷா திரைப்படம் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதும் கொண்டாடப்படும் திரைப்படமாக பாட்ஷா இருந்தது.

rajinikanth raghuvaran batcha
rajinikanth raghuvaran batcha
Social Media Bar

அதற்கு பிறகு பாட்ஷா மாதிரி எவ்வளவோ திரைப்படங்கள் வந்தப்போதும் பாட்ஷாவிற்கு நிகராக இன்னொரு திரைப்படம் வரவில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் பாட்ஷா திரைப்படம் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார்.

பாட்ஷா படம் வெளியான காலக்கட்டத்தில் ரஜினிகாந்திற்கு தெலுங்கு சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றே கூற வேண்டும். அப்போது தெலுங்கு ரசிகர்கள் ரஜினிகாந்தை அவ்வளவாக அறிந்து வைத்திருக்கவில்லை.

எனவே அந்த படத்தின் தெலுங்கு உரிமையை மிக குறைந்த விலைக்கே விற்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக பாட்ஷா திரைப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்திற்கு தெலுங்கில் மார்க்கெட் உயர்வதற்கு அந்த படம் காரணமாக இருந்தது.

அந்த படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய நபர் எக்கச்சக்க லாபம் பார்த்தார். இது தெரிந்திருந்தால் நாமே தெலுங்கில் வெளியிட்டுருக்கலாமே என பிறகு மனம் வருந்தினாராம் படத்தின் தயாரிப்பாளர்.