News
மகாராஜா மாதிரி ஒரு கதையை ரஜினிக்கு சொன்னேன்… அப்பவே மாஸ் காட்டிய பார்த்திபன்!..
தொடர்ந்து உலக சினிமா வகையிலான திரைப்படங்களை தமிழில் திரைப்படமாக்குவதற்கு முயற்சி செய்து வந்தவர் இயக்குனர் பார்த்திபன். ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானப்போது சாதாரண திரைப்படங்களை இயக்கி வந்த பார்த்திபன் அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
பார்த்திபனை பொறுத்தவரை தமிழ் சினிமாவிற்குள் ஒரு மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் ஏற்கனவே ஒத்த செருப்பு என்கிற கதையை இயக்கினார்.
பார்த்திபனின் கதை:
படம் முழுக்கவே ஒரே ஒரு கதாபாத்திரம்தான் விஷ்வலாக நம் முன் தோன்றும் அதை வைத்தே அந்த கதையை சிறப்பாக கொண்டு சென்றிருப்பார் பார்த்திபன்.

இந்த நிலையில் பெரும் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்பது பார்த்திபனின் பெரும் கனவாக இருந்து வந்தாலும் கூட இப்போது வரை பெரும் நடிகர்கள் யாருமே அவருக்கு வாய்ப்பு கொடுத்ததே கிடையாது.
ரஜினிக்கு சொன்ன கதை:
இதுக்குறித்து பார்த்திபனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருமுறை எனக்கு ரஜினிகாந்திடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கிட்டத்தட்ட இப்போது விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா மாதிரியான ஒரு கதையை அவரிடம் கூறினேன்.

படத்தின் பாதி கதை வரைக்கும் கதாநாயகன் எதற்காக பழி வாங்குகிறான் என்பதே மக்களுக்கு தெரியாது என்றேன். ஆனால் அந்த கதை ரஜினிகாந்தின் பார்வையில் இருந்து அவருக்கு ஒத்துவரவில்லை. அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டார் என அந்த நிகழ்வு குறித்து கூறியுள்ளார் பார்த்திபன்.
