News
ரஜினிக்கே இது பெரும் பின்னடைவு.. கடைசியில் ஜோசியர் சொன்னது பலிச்சிட்டு போல!.. அதிர்ச்சி கொடுத்த லால் சலாம் திரைப்படம்!.
Rajinikanth lal salaam: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம்தான் கடைசியாக பெரும் தோல்வி படமாக ரஜினிகாந்திற்கு அமைந்தது. அதற்கு பிறகு கபாலி திரைப்படத்தில் துவங்கி பல திரைப்படங்கள் ரஜினிகாந்திற்கு பெரும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன.
இதற்கு நடுவே வெளிவந்த தர்பார் அண்ணாத்தே மாதிரியான சில திரைப்படங்கள் குறைவான வெற்றியை கண்டாலும் எந்த ஒரு திரைப்படமும் பெரும் தோல்வியை காணவில்லை. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மேலும் ரஜினிகாந்த் ஒரு வசூல் மன்னனாக இருந்தும் இந்த திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. இதுவரை தமிழ்நாடு அளவிலேயே அதிகப்பட்சம் 10 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளதாம் லால் சலாம்.
பொதுவாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் எல்லாம் முதல் நாளே 10 கோடியை விடவும் அதிக லாபத்திற்கு ஓட கூடியவை. ஆனால் லால் சலாம் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது. இதற்கு முன்பு கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தப்போது அந்த திரைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.
அப்போதே ஒரு ஜோசியர் கூறும்போது ரஜினிகாந்த் அவரது குடும்பத்தார் திரைப்படங்களில் நடித்தால் அந்த திரைப்படம் வெற்றி பெறாது என கூறியதாக ஒரு பேச்சு உண்டு. அது உண்மை என கூறும் வகையில் தற்சமயம் லால் சலாம் திரைப்படம் தோல்வியை கண்டுள்ளது.
