அடுத்த படத்துக்கு ரஜினி போட்ட புது ரூல்ஸ்.. ஆடிப்போன திரைத்துறை.!
நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பில் நிறைய மாற்றங்களை செய்திருப்பதாக கூறப்படுகிறது. வேட்டையன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் கதைகளை ரஜினிகாந்த் தான் தேர்ந்தெடுத்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு அந்த இரண்டு திரைப்படங்களுமே அதிக வரவேற்பு பெற்றன. வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியும் கண்டது. இதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லைக்காவிற்கு தான் திரைப்படம் தயாரிப்பதற்கான உரிமையை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அந்த வகையில் லைக்கா நிறுவனத்திற்கு புதிய விதிமுறை ஒன்றை ரஜினிகாந்த் போட்டுள்ளார். அதாவது அடுத்த படத்தைப் பொறுத்தவரை அந்த படத்தின் கதையை ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்க போவதில்லை

நன்றாக இருக்கிறது என்று கூறி லைக்கா அனுப்பும் கதைகளை மட்டுமே ரஜினிகாந்த் கேட்பார். அதில் ரஜினிகாந்துக்கு பிடித்த கதை படமாக்கப்படும் எனவே எந்த இயக்குனரின் கதையாக இருந்தாலும் லைக்காவிற்கும் ரஜினிகாந்த்துக்கும் பிடித்து விட்டால் அந்த படத்தில் ரஜினி நடிப்பார் என்கிற காரணத்தினால் இப்பொழுது இயக்குனர்கள் இதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொம்பன் முத்தையா வரை ரஜினிக்கு கதை சொல்லி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.