பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான்!.. ஜெய் பீம் இயக்குனரால் கடுப்பான ரஜினிகாந்த்!..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிபி சக்ரவர்த்தி திரைப்படத்தில் நடிகக் இருந்தார் ரஜினி. ஆனால் அவரது கதை அவ்வளவாக இவருக்கு பிடிக்காத காரணத்தால் அதற்கு பதிலாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலிடம் கமிட் ஆனார். போன வருடம் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

பொதுவாக ஞானவேல் மூன்று மாதங்களுக்குள் படத்தை இயக்கிவிட கூடியவர்தான். ஆனால் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதால் அதிகமாக குழப்பிக்கொண்டு பட காட்சிகளை அடிக்கடி மாற்றி வருகிறாராம். இதனால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னமும் பட வேலைகள் முடியாமல் இருக்கின்றன.

rajinikanth
rajinikanth
Social Media Bar

இந்த படத்திற்கு இன்னமும் டப்பிங் வேலைகள் வேறு மிச்சமிருக்கின்றன. இந்த நிலையில் ஒதுக்கிய நாட்களை தாண்டி படமெடுக்க தேதி கேட்கிறாராம் இயக்குனர் ஞானவேல். அடுத்த மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இதில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். எனவே என்ன படப்பிடிப்பாக இருந்தாலும் இந்த மாதத்தோடு முடித்துக்கொள்ளுங்கள். அதற்கு மேல் தேதி தர மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம் ரஜினிகாந்த்.