ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் டும் டும் டும்..! நடிப்புக்கு இனி முழுக்கா?

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபல தயாரிப்பாளரை காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ என பிசியாக இருக்கிறார்.

இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமீபமாக இந்தியில் ஐக்கியமாகியுள்ளார். இந்தியில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ரகுல் காதல் வயப்பட்டு விட்டதாக பேசிக் கொள்ளப்பட்டது.

சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாக்கி பக்னானியே அதை உறுதிபடுத்திவிட்டார். இந்த காதல் திருமணத்தில் முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் பேசும்போது, விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளாராம்.

அயலான், இந்தியன் 2 போன்ற படங்கள் ரகுலுக்கு அடுத்து மேலும் பல பட வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரகுல் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Refresh