இளையராஜாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய ராமராஜன்! –  மீண்டும் ஒன்றிணைந்த வெற்றி கூட்டணி!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வெற்றி படம் கொடுத்த முக்கிய கதாநாயகர்தான் ராமராஜன். அவரது காலத்தில் அவருக்கு அதிக ரசிகர்களும் இருந்தனர்.

Social Media Bar

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தார் ராமராஜன். 10 வருடங்களுக்கு முன்பு மேதை என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் பெரிய வெற்றி படமாக் அமையவில்லை.

இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருடன் எம்.எஸ் பாஸ்கர் மற்றும் ராதா ரவி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராமராஜன் திரைப்படங்கள் வெற்றி வாகை சூடிய காலக்கட்டத்தில் அவரது படத்திற்கு முக்கிய அம்சமாக இருந்தது இளையராஜாவின் இசை. எனவே சாமானியன் திரைப்படத்திற்கும் கூட இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என முடிவாக இருந்தார் ராமராஜன். இதற்காக வெகு நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இறுதியாக அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாமானியன் திரைப்பட குழுவினர்  இளையராஜாவிடம் சென்று ஆசிப்பெற்றுள்ளனர்.

சாமானியன் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.