மொட்டை மாடில நான் பண்ணுன அந்த சம்பவம்.. தடம் மாறிய வாழ்க்கை… உண்மையை கூறிய நடிகை ரம்யா பாண்டியன்.!

திடீரென தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து மக்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் ஜோக்கர் மாதிரியான சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் வாய்ப்புகளும் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் instagram பக்கத்தில் அவர் திடீரென்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக பிரபலமானது.

அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் ரம்யா பாண்டியன். மேலும் அவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடையாது. அதன் மூலமாக இன்னும் அதிக பிரபலம் அடைந்தார் ரம்யா பாண்டியன்.

 

ரம்யா பாண்டியனின் அனுபவம்:

இந்த நிலையில் அந்த புகைப்படம் வெளியிட்ட சமயத்தில் அவருக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அது குறித்து அவர் கூறும் பொழுது அந்த சமயங்களில் எனக்கு திடீரென்று அந்த போட்டோ வைரல் ஆகி நிறைய கமெண்டுகள் வந்தது.

Social Media Bar

ஒரு கட்டத்திற்கு பிறகு நான் அந்த கமாண்ட்டுகளை படிப்பதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் என்னை குறித்து தவறான கமாண்டுகளும் ஆபாசமான கருத்துக்களும் அதிகமாக வந்தன. அந்த புகைப்படத்தை எடுப்பதற்கு பெரிதாக எல்லாம் நான் கஷ்டப்படவில்லை.

எனது உறவினர் ஒருவரை அழைத்து சென்று புடவை கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் அமர்ந்து எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்று கூறியிருக்கிறார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த புகைப்படங்கள் தான் பிறகு ரம்யா பாண்டியனின் சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது.