Connect with us

அஜித்தால் மலை வெள்ளத்தில் குடும்பத்தோடு கிளம்பினேன்!.. பிரபல பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தல!.

rangaraj pandey ajith

Cinema History

அஜித்தால் மலை வெள்ளத்தில் குடும்பத்தோடு கிளம்பினேன்!.. பிரபல பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தல!.

Social Media Bar

தமிழ்நாட்டில் அதிக ரசிக பட்டாளத்தை கொண்டவர் நடிகர் தல அஜித். நடிகர் விஜய் திரைத்துறையில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் இறங்கியப்போது அது அவருக்கு உடனே ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அஜித்திற்கு அதற்கு கொஞ்சம் காலமானது.

ஆனால் பில்லா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை அனைவரும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

எப்படியும் இந்த வருட இறுதிக்குள் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அவருடன் பணிப்புரிந்த அனுபவம் குறித்து பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் வெளிவந்த நேர்க்கொண்ட பார்வை படத்தில் அஜித் வக்கீலாக நடித்திருப்பார். அதில் அவருக்கு எதிராக போராடும் கதாபாத்திரமாக ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் திரைப்படத்தின் ரிமேக் தான் நேர்க்கொண்ட பார்வை.

இந்த நிலையில் அந்த படத்தின் போஸ்டர் ஒன்றை திரையரங்கில் பெரிதாக வைக்கும்போது அதில் அஜித்துக்கு நிகராக ரங்கராஜ் பாண்டேவின் புகைப்படமும் இருந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த ரங்கராஜ் பாண்டே இயக்குனருக்கு போன் செய்து கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் நடிகர் அஜித் தான் அந்த மாதிரியான போஸ்டரை வைகக் சொன்னார் எனக் கூறியுள்ளார். அப்போது சென்னையே மழை வெள்ளமாக இருந்துள்ளது. இருந்தாலும் அந்த போஸ்டரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார் ரங்கராஜ் பாண்டே. இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top