விஜய் தேவரக்கொண்டாவுடன் பயணம் சென்று உண்மையா? – உண்மையை கூறிய ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தற்சமயம் வெளிவந்த வாரிசு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Social Media Bar

ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் ராஷ்மிகா. இதனால் அதிகமாக மன உளைச்சலை சந்தித்து வருகிறார். ஏற்கனவே இதுக்குறித்து இருமுறை பேசியுள்ளார். தனது இன்ஸ்டா அக்கவுண்டிலும் கூட தன் மனநிலையை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் தேவரக்கொண்டாவுடன் ராஸ்மிகா மாலத்தீவுக்கு பயணம் சென்றுள்ளார் என ஒரு சர்ச்சை கிளம்பியது. இதுக்குறித்து தனது பேட்டியில் பேசியுள்ளார் ராஷ்மிகா.

அப்போது மக்கள் எப்போதும் என்னை வெறுக்கின்றனர். நான் நிறைய நாட்கள் இதனால் தனியாக அழுதுள்ளேன் என தெரிவித்திருந்தார். மேலும் விஜய் தேவரக்கொண்டா எனது நண்பர் அவருடன் நான் பயணம் செல்வதில் என்ன தவறு என கேட்டுள்ளார்.