Latest News
நாய்கள் மீது ரத்தன் டாடாவிற்கு இருந்த பேரன்பு.. யாருமே செய்யாத அந்த விஷயத்தை செய்தார்.. ஸ்டார் ஹோட்டல் ஊழியரே அதிர்ந்த நிகழ்வு..!
சிறுவயது முதலே நாய்களின் மீது பேரன்பு கொண்டவர் ரத்தன் டாடா. பல நாய்களை இவர் வளர்த்திருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே அவர் தெரு நாய்களை கூட எடுத்து வளர்த்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு அமைதி கொடுக்கும் ஒரு விஷயம் என்றால் அது நாய்தான்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை கொடுக்கக் கூடிய ஒரு உயிரினமாக நாய் இருப்பதால் தொடர்ந்து நாய் விரும்பியாக இருந்து வந்தார்.
ரத்தன் டாடா
தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமின்றி மொத்தமாகவே அவருக்கு நாய் மீது அதிக அன்பு இருந்தது. இதனால் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களையும் உணவகங்களையும் டாடா கட்டிய போதும் கூட அங்கு உள்ள ரிஷப்ஷனுக்கு வெளியில் நிற்கும் ஊழியர்களுக்கு அவர் ஒரு உத்தரவு போட்டு இருந்தார்.
அதாவது ஹோட்டல் வாசலில் வந்து தெரு நாய் ஏதாவது நின்றால் அதை அடித்து விரட்ட கூடாது. அதேபோல உண்மையிலேயே சிகப்பு கார்ப்பரேட் போடப்பட்ட ஒரு ஹோட்டலின் வாசலில் நாய் நின்று இருந்தும் அதை ஊழியர்கள் விரட்டாத வீடியோ எடுத்து ஒரு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார் அது அதிக வைரலானது தற்சமயம் மீண்டும் அந்த வீடியோ வைரலாக துவங்கி இருக்கிறது.