Connect with us

பழைய காதல் முடிஞ்சு போச்சு போல..! ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட ரவீனா.. அட கொடுமையே.!

raveena-daha

Actress

பழைய காதல் முடிஞ்சு போச்சு போல..! ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட ரவீனா.. அட கொடுமையே.!

Social Media Bar

தன் திறமையான நடனத்தாலும், நடிப்பினாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரவீனா தாஹா. குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்த ரவீனா தாஹா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நடன ரியாலிட்டி ஷோவில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ரவீனா தாஹா, தற்போது பல படங்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கிடையே பிரபலமாகி உள்ளார்.

சமீபத்தில் இவர் பிரபலம் ஒருவருடன் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவருடைய காதலரை பிரிந்து விட்டாரா என்பது போல பல கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ரவீனா தாஹா

ரவீனா தாஹா ஜீ தமிழில் நடன ரியாலிட்டி ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸில் போட்டியாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற தொலைக்காட்சி தொடரில் துர்காவாக நடித்து மக்களிடையே பிரபலமானார்.

raveena-daha

பிறகு வெள்ளித்திரையில் கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ராட்சசன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார்.

அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ரவீனா தாஹா, விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

raveena-daha

இவர் பல பேட்டிகளிலும் கலந்து கொண்டு பல தகவல்களை கூறி வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் மகனுடன் சேர்ந்து நடிப்பதற்கு ஆசைப்படுவதாக கூறிய நிலையில், அது பெரும் சர்ச்சையாகி ரவீனா தாஹாவுக்கும், விஜய் மகன் இருவருக்கும் காதல் இருப்பது போன்ற வதந்திகள் பரவின.

raveena-daha

கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்றார். அப்போது சக போட்டியாளராக பங்கேற்ற மணி என்பவரிடம் ரவீனா நெருங்கி பழகியதால் இருவருக்கும் காதல் இருக்கிறது என பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில் ரவீனாவும், மணியும் கடந்த சில ஆண்டுகளாகவே நண்பர்களாக பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக நடனமாடுவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ வெளியிட்ட ரவீனா தாஹா

ரவீனா அவ்வப்போது பல நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டில் இருப்பார். அந்த வகையில் தான் தற்போது ஜாபர் சாதிக் மற்றும் ரோஷன் என்பவருடன் நடனமாடி அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

ஜாபர் சாதிக் பல படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

To Top