Connect with us

நமக்கே வேட்டு வச்சிடும் போலயே!.. இந்தியன் 2 குறித்து தயக்கத்தில் இருக்கும் ரெட் ஜெயண்ட்!..

udhayanithi indian 2

News

நமக்கே வேட்டு வச்சிடும் போலயே!.. இந்தியன் 2 குறித்து தயக்கத்தில் இருக்கும் ரெட் ஜெயண்ட்!..

Social Media Bar

Indian 2 : தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக பெரும் இயக்குனராக இருந்தும் கூட சில காலங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் உள்ளது.

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை லஞ்சத்திற்கு எதிரான ஒரு திரைப்படமாக இது இருக்கும். லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அனைவரையும் இந்தியன் என்கிற முதியவர் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுதான் படத்தின் கதையாக இருக்கும்.

இந்த நிலையில் அதே கதையைதான் இந்தியன் 2 திரைப்படத்திலும் வைத்திருக்கின்றனர். இந்தியன் இறந்துவிட்டார் என்று நினைக்கும் மக்கள் திரும்பவும் லஞ்சம் வாங்க துவங்குகின்றனர். லஞ்சம் தலைவிரித்தாடி கொண்டிருக்கும் சமயத்தில் மீண்டும் இந்தியன் வருகிறார் இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது.

இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தற்சமயம் சமகாலத்தில் நடப்பது போல இந்த கதை இருப்பதால் இது திமுகவின் அரசை கேளிக்கு உள்ளாக்கும் விதமாக இருக்குமோ என்கிற கேள்வி தற்சமயம் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு எழுந்துள்ளது.

ஏனெனில் திமுக ஆட்சியில் நடக்கும் லஞ்சம் என்பதாக தானே அது மக்கள் மத்தியில் பேசப்படும். எனவே படத்தை தள்ளி வைக்க முடியுமா என்று யோசித்து இருக்கின்றனர் பிறகு தள்ளி வைப்பது கடினம் என்பதால் எந்த ஒரு போஸ்டரிலும் படத்திலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரை போடாமல் வெளியிட முடிவு செய்துள்ளனர் என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top