விஜய் டிவி மூலமாக பிரபலம் அடைந்து தற்சமயம் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ரியோ ராஜ்.
இவர் ஏற்கனவே நடித்த ஜோ என்கிற திரைப்படம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக பிரபலமான திரைப்படமாக இருந்தது. ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் இருந்தது.
இந்த படத்தில் மாளவிகா என்னும் மலையாள நடிகை இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்து நடித்து இருக்கும் திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கலையரசன் தங்கவேல்.
படத்தின் கதை:
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது படத்தின் கதை அமைப்பானது பெண்ணியவாதிகளுக்கு எதிராக இருப்பது ட்ரைலர் மூலமாக தெரிகிறது.
பல்வேறு கருத்துகளை கொண்டு கதாநாயகனை பாடாய் படுத்தும் கதாநாயகி. அதனால் கதாநாயகன் படும் அவஸ்தை என்பதுதான் படத்தின் கருவாக இருக்கும் என்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் காதலில் துவங்கும் கதை பிறகு விவாகரத்து வரை போய் நிற்கிறது.
ஆனால் எப்படியும் ஒரு நேர்மறையான முடிவோடுதான் படம் முடிவடையும் பெரும்பாலும் இந்த மாதிரி கதை அமைப்பில் அந்த பெண் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்துவதாகதான் கதை அம்சம் இருக்கும். எனவே இந்த படமும் அப்படி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த ட்ரைலருக்கு இப்பொழுது வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.