News
படுக்கையறை காட்சிகள் வேண்டாம்… ஆனால் அது வேணும்..! சீரியல் நடிகைக்கு வந்த ஆசை..!
தமிழில் தற்சமயம் சினிமாவில் நடித்து கிடைக்கும் வரவேற்பை விடவும் சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைக்கின்றன. இதனால் தொடர்ந்து நடிகைகள் சினிமாவை போலவே சீரியலுக்கும் அதிக மதிப்பு கொடுக்க துவங்கியுள்ளனர்.
முன்பெல்லாம் சீரியல் மார்க்கெட் என்பது அவ்வளவாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது சீரியலுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. சீரியல் நடிகைகளே ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர்.
லட்சங்களில் சம்பாதிக்கும் அளவிற்கு அவர்களது மார்க்கெட் உயர்ந்துள்ளது. இருந்தாலும் சினிமாவிற்கு சென்றால் இன்னமும் அதிகமாக ஏதாவது செய்ய முடியும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.
பதிலளித்த நடிகை:
அப்படியாக வெகு காலங்களாக சீரியலில் இருந்து சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருபவர்தான் நடிகை ரியா விஸ்வநாதன். ரியா விஸ்வநாதன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக மிகவும் பிரபலமடைந்தவர்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது சில சர்ச்சையை ஏற்படுத்தும் தகவல்களை கூறியிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளே சர்ச்சையை கிளப்பும் விதமாகதான் இருந்தது. இந்த நிலையில் அங்கிருந்த தொகுப்பாளர் அவரிடம் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களில் நடிக்க சொன்னால் செய்வீர்களா? என கேட்டார்.
அதற்கு இல்லை செய்ய மாட்டேன் என கூறினார் ரியா விஸ்வநாதன். அப்போது அவரிடம் படுக்கையறை காட்சிகள் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பீர்களா? என கேட்டப்போது படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆனால் முத்த காட்சிகளில் நடிப்பேன் என கூறியுள்ளார்.
