News
புஸ்ஸி ஆனந்த் கூட இருக்கும்வரை விஜய் எதிர்காலம் கேள்விக்குறிதான்!. விஜய்க்கு தெரியாமல் நடக்கும் உள் அரசியல்!.. வெளிப்படுத்திய எஸ்.ஏ.சி!.
தந்தை மூலமாக சினிமாவில் அறிமுகமாகிய தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்யும் முக்கியமானவர். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு அவ்வளவாக வரவேற்புகளே இருக்கவில்லை. பலரும் விஜய்யை அவதூறாக பேசினர்.
அவருக்கு கதாநாயகன் ஆவதற்கான தகுதியெல்லாம் இல்லை என்றெல்லாம் பேசி கொண்டிருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் மாறாக தொடர்ந்து உழைத்து தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் தற்சமயம் அரசியலில் காலடியை எடுத்து வைத்துள்ளார் விஜய். ஆரம்பத்தில் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் மூலமாக சினிமாவிற்கு வந்தாலும் கூட போக போக விஜய்க்கும் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே சுமூகமான உறவுகள் இருக்கவில்லை.

இந்த நிலையில் விஜய்யின் படக்கதைகளை அதற்கு முன்பு எஸ்.ஏ சந்திரசேகர்தான் தேர்ந்தெடுத்து வந்தார். பிறகு அதிலிருந்து அவரை விலக்கி வைத்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் அரசியலிலும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல்தான் இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் குறித்து சில முக்கிய விஷயங்களை எஸ்.ஏ சி பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது கட்சி துவங்குவதற்கு முன்பே புஸ்ஸி ஆனந்தின் எண்ணங்கள் பணம் சம்பாதிப்பதில்தான் இருந்து வந்தது. ஆனால் அவரை குறித்து நான் பேசும்போதெல்லாம் விஜய் அதை ஒப்புக்கொள்வதில்லை.
புஸ்ஸி ஆனந்த் ஒரு வாட்சப் குழு வைத்திருக்கிறார். அதில் விஜய் உட்பட கட்சியின் முக்கியமான ஆட்கள் அனைவரும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலை செய்து அதனால் களைத்து போய் வெளியில் உள்ள பெஞ்சில் படுத்து உறங்குவது போல ஒரு போட்டோ எடுத்து அதை தனது ஊழியர்கள் மூலம் பகிர செய்வார் புஸ்ஸி ஆனந்த்.
இதை பார்க்கும் விஜய் நமக்காக வேலை செய்து இந்த மனிதன் இப்படி கீழே படுத்துள்ளாரே என பரிதாபப்படுவார். இப்படிப்பட்ட நபருடன் இருந்தால் விஜய்யின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என கூறுகிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.
