News
கலாச்சாரம்னு அதை பண்ணாதீங்க… அதை பண்ணுனா ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க.. மனம் உடைந்த சாய் பல்லவி..!
பழங்குடியின மக்களுக்கு பெயர் போன மாநிலமாக தமிழ்நாடு எப்போதுமே இருந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தென்னிந்தியாவில் தான் வாழ்ந்ததாக வரலாறுகள் இருக்கின்றன.
இப்பொழுதும் கூட ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிகமாக பழங்குடியின மக்கள் வாழ்வதை பார்க்க முடியும். யானைகளை வளர்ப்பது மாதிரியான தொழில்களையெல்லாம் அவர்கள் தான் இப்பொழுதும் செய்து வருகின்றனர்.
சாய் பல்லவி ஓப்பன் டாக்:
மின்சாரம் கூட இல்லாத பல கிராமங்களில் இன்னமும் இந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதை பார்க்க முடியும். அப்படியாக படகா என்கிற மக்களிலிருந்து வந்தவர்தான் நடிகை சாய் பல்லவி. அப்படியான ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து வந்திருந்தாலும் கூட சாய் பல்லவி இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மக்கள் குறித்து சாய்பல்லவி பேசும் பொழுது படகா சமூகத்திலிருந்து வேற சமூகத்தில் மாப்பிள்ளையை திருமணம் செய்யக்கூடாது. நான் வேறு யாரையாவது காதலித்து திருமணம் செய்தேன் என்றால் எனது சமூகத்தினர் என்னை விலக்கி வைத்து விடுவார்கள்.
ஆனால் எனது அப்பாவும் அம்மாவும் சமூகத்தில் இல்லை. தற்சமயம் அதிலிருந்து வெளியே வந்து விட்டார்கள் என்பதால் எனக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை. ஆனாலும் நம் விருப்பத்திற்கு துணையை தேடி கொள்ளாதது சங்கடமான விஷயமாகும். இதுக்குறித்து என் தந்தையிடம் கேட்டப்பொழுது அதுதான் கலாச்சாரம் என அவர் கூறினார் என்கிறார் சாய் பல்லவி.
