Bigg Boss Tamil
இத்தனை லட்சமா? குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிய ஷாலின் சோயா சம்பள விவரம்!..
Shaolin Zoya: திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை விட ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல், ரீல்ஸ் டிக் டாக் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதில் தற்சமயம் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக அமைகிறது.
அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகளுக்கு தனி டிஆர்பி ரேட்டிங் இருக்கிறது. இந்நிலையில், அந்த சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த நான்கு சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த சீசன் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. சீசன் 5 பற்றிய தகவல் வெளி வந்ததும் அதில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. முக்கியமாக நடுவர் முதல் கோமாளிகள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர்தான் ஷாலின் சோயா.
தமிழ்நாட்டில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே ஷாலின் சோயா உருவாக்கி இருக்கிறார்.
ஷாலின் சோயா
ஷாலின் சோயா கேரளா மாநிலம் மலப்புரம் திரூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு தந்தை தொழிலதிபர். இவர் தாய் நடன ஆசிரியர். எனவே ஷாலின் சோயா குழந்தை நட்சத்திரமாக பல மலையாள தொடர்களில் அறிமுகமாக, பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து, தமிழ் சினிமாவில் ராஜா மந்திரி என்னும் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் அதனைத் தொடர்ந்து தமிழில் கண்ணகி என்னும் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
குக் வித் கோமாளியில் ஷாலின் சோயா
சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாலின் சோயா அவரின் குறும்புத்தனமான சேட்டைகள் மூலமும், கொஞ்சி பேசும் தமிழாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு சிலர் இவரை ஓவர் ஆக்டிங் செய்கிறார் என ட்ரோல் செய்து வந்தாலும், இவர் ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தாரோ அதேபோன்று நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி எலிமினேஷன் எபிசோடில் குறைவான மதிப்பெண்கள் பெற்று ஷாலின் சோயா வெளியேறி இருக்கிறார்.
இதற்கு முன்பாக விஜேபிரியங்கா, டிடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது ஷாலின் சோயாவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்நிலையில் குக் வித் கோமாளியில் ஷாலின் சோயாவின் சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஷாலின் சோயா ஒருஎபிசோட்டிற்கு 10,000 சம்பளமாக பேசப்பட்டு 12 வாரங்கள் இருந்த நிலையில் ரூ. 1,20,000 சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
