Connect with us

இப்பதான் சமந்தா முதன் முதலா நடிச்சிருக்காங்க! – கலாய்த்த விக்ரம்!

News

இப்பதான் சமந்தா முதன் முதலா நடிச்சிருக்காங்க! – கலாய்த்த விக்ரம்!

Social Media Bar

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தனது அழகான க்யூட் ஸ்மைல் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக அவர் நடித்தது பலருக்கும் பிடித்திருந்தது.

அதன் பிறகு சமந்தா கொஞ்சம் க்யூட்டான கேரக்டராக நடித்த படம் பத்து எண்ரதுக்குள்ள என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தில் அப்பாவியாக அதே சமயம் சுட்டி தனமான ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார்.

மேலும் அந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்திலும் சமந்தாதான் நடித்திருந்தார். அதற்காக அவர் ஏகப்பட்ட மெனக்கெடல்களை செய்ய வேண்டி இருந்தது. இதில் சமந்தா குதிரையை ஓட்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் இருந்தன. இதற்காக நிஜமாகவே குதிரை ஓட்ட கற்றுக்கொண்டு படத்தில் குதிரையை ஓட்டினார் சமந்தா.

அந்த காட்சிகளை கண்ட இயக்குனரும் விக்ரமும் நன்றாக உள்ளது. உண்மையிலேயே முதன் முதலாக இப்பதான் நீங்க நடிச்சிருக்கீங்க சமந்தா என கூறி அவரை கேலி செய்துள்ளனர். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

To Top