ஒரு போலீஸ் பண்ணுன உதவியில்தான் சினிமாவுக்கு வந்தேன்!.. சமுத்திரகனி வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..
Samuthrakani: தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக, திரைக்கதை எழுத்தளாராக நடிகராக என பன்முக திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி.
இயக்குனர் சசி,அமீர்,பாலா இந்த குழுவில் சமுத்திரக்கனியும் இருந்து வந்தார். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்.
தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரை சென்று நடித்துவிட்டார் சமுத்திரக்கனி. முதன் முதலாக இவர் சென்னைக்கு வந்த சுவாரஸ்யமான கதையை தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமுத்திரக்கனி ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கனவாக இருந்தது.

இதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுகளில் முதற்க்கட்ட தேர்வையும் சமுத்திரக்கனி எழுதியிருந்தார். ஆனாலும் அவருக்கு அதன் மீது எந்த ஈடுபாடுமே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சமுத்திரக்கனி தனது தந்தையின் பையில் இருந்த 130 ரூபாயை திருடிகொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.
சென்னை வந்த சமுத்திரக்கனி:
சென்னைக்கு வந்து தங்குவதற்கு இடமில்லாமல் சாலை ஓரமாக படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த காவலாளி ஒருவர் யாரப்பா நீ இங்கு படுத்திருக்கிறாய் என கேட்கவும் நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தேன் என சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.

இந்த இடம் குற்றவாளிகள் உலாவும் பகுதி தம்பி என சமுத்திரக்கனியை அழைத்து சென்று காவல் நிலையத்தில் தூங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அந்த காவலாளி. அதன் பிறகு சமுத்திரக்கனி எங்கு செல்ல வேண்டும் என கேட்டு அந்த இடத்திற்கு பேருந்தில் அனுப்பி வைத்தார் காவலர்.
இந்த நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி அதனால்தான் நான் எனது திரைப்படங்கள் அனைத்திலும் மக்களுக்கு நன்மை செய்யும் கதாபாத்திரம் ஒன்றை வைத்துவிடுவேன். இங்கு நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என கூறுகிறார் சமுத்திரக்கனி.