TV Shows
பெட்ரூம்ல ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறா?.. மனைவி குறித்து வருந்திய நடிகர் சஞ்சீவ்.!
முன்பை விட சீரியல் நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது இப்போது அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சீரியல் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவாக இருக்கும். அவர்கள் சினிமா நடிகைகள் அளவுக்கெல்லாம் சம்பளம் வாங்க மாட்டார்கள்.
ஆனால் இப்போது அப்படியில்லை. சீரியல் நடிகைகளுக்கான வரவேற்பு என்பது அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 25,000 வரை சம்பளம் வாங்குபவர்களாக சீரியல் நடிகைகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை ஆல்யா மானசா இருந்து வருகிறார்.
இவர் தற்சமயம் சன் டிவியில் இனியா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இவரது கணவர் சஞ்சீவ் அதே சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சீரியல்களில் உள்ள காதல் காட்சிகள் குறித்து சஞ்சீவ் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது நான் ஏதாவது சின்ன காதல் காட்சிகளில் நடித்துவிட்டாலும் என் மனைவி சண்டைக்கு வந்துவிடுவாள். கயல் சீரியலில் ஒரு நாள் கயலுக்கு நான் முத்தம் கொடுக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சியை பார்த்த என் மனைவி சோகமாகிவிட்டாள்.
ஆனால் இவள் மட்டும் இனியா சீரியல் முழுக்க காதல் காட்சிகளில்தான் நடித்து வருகிறாள். இனியா சிரீயலில் படுக்கையறையில் காட்சிகள் இருக்கின்றன.இவளுக்கு வந்தா தக்காளி சட்னியாம் எனக்கு வந்தா மட்டும் ரத்தமாம் என இதுக்குறித்து பேசியுள்ளார் சஞ்சீவ்.