ரொம்ப அசிங்கமா இருக்கு… வெளியவே தலை காட்ட முடியல.. சந்தானம் மகள் செய்த காரியம்..!
நடிகர் சந்தானம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பேய் படங்களாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் பேய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் சந்தானம் தொடர்ந்து டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வருகிற மே 16 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் நிறைய பேட்டிகளை கொடுத்திருந்தார்.
அதில் அவரிடம் கேட்கும்போது ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்பட காலக்கட்டத்தில் எல்லாம் கலர் கலராக உடை அணிந்து வருவீர்கள். இப்போது எல்லாம் பயங்கர ட்ரெண்டான உடையில் வருகிறீர்கள். அதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சந்தானம் என் மகள்தான் எல்லாத்துக்கும் காரணம், அவள் ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறாள். என் தலைமுடியை கூட அவள்தான் மாற்றிவிட்டாள். இதனால் வெளியே தலை காட்ட முடியவில்லை என்கிறார் நடிகர் சந்தானம்.