Connect with us

எனக்கு ஆர்யா கார் ஓட்டணும்.. அதான் ஆசை!.. வெளிப்படையாக கூறிய சந்தானம்!..

arya sanathanam

Cinema History

எனக்கு ஆர்யா கார் ஓட்டணும்.. அதான் ஆசை!.. வெளிப்படையாக கூறிய சந்தானம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடியில் பல வகையான உச்சத்தை தொட்ட பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார்.

எடுத்த உடனேயே சீரியஸான கதாநாயகனாக நடித்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதலில் காமெடி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். போக போக அவரது திரைப்படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்க்க துவங்கினார்.

இப்போது அவர் ஆக்‌ஷன் படம் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஹீரோவாக நடிக்க துவங்கினாலும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக தன்னை காட்டி கொள்ளாமலே இருந்தார் சந்தானம். இந்த நிலையில் தற்சமயம் யு ட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க துவங்கியுள்ளார் சந்தானம்.

அதில் அவரிடம் கேள்வி கேட்கும்போது உங்கள் காரை ஆர்யா அல்லது ஜீவா இருவரில் யார் ஓட்ட வேண்டும் என ஆசைப்படுவீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சந்தானம் ஆர்யா சூப்பராக கார் ஓட்டுவான். பி.எம்.டபுள் யுவில் மினி கூப்பர் என்கிற காரை வாங்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.

ஆனால் எனக்கு முன்பு அந்த காரை அவன் வாங்கிவிட்டான் என ஆர்யா குறித்து சந்தானம் பதிலளித்திருந்தார்.

To Top